ரூ 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கை போ சே என்ற இந்திப் படம் ஒரே வாரத்தில் ரூ 29.50 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதன் பகத்தின் 3 மிஸ்டேக்ஸ் இன் மை லைப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் கை போ சே. அபிஷேக் கபூர் இயக்கத்தில், சுஷாந்த் சிங் ரஜ்புத், அமித் ஷாத், ராஜ்குமார் யாதவ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
மூன்று நண்பர்களின் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் மையக் கரு. 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு முதல் சொந்தக்காரரான சேதன் பகத், கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் எழுதியுள்ள கதை இது.
பாராட்டுகளை மட்டுமல்ல, வசூலும் பிரமாதமாக உள்ளது இந்தப் படத்துக்கு. ரூ 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கை போ சே, முதல் வார இறுதியில் ரூ 29.50 கோடியை வசூலித்துள்ளது.
வார இறுதி நாட்களில் ரூ 18.10 கோடியும், திங்களன்று ரூ 3.25 கோடியும், செவ்வாய்க்கிழமை 2.95 கோடியும், புதன்கிழமை 2.70 கோடியும், வியாழன்கிழமை ரூ 2.50 கோடியும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
பாஸிடிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த வாரமும் இதே வசூல் தொடரும் என நம்புவதாக இயக்குநர் அபிஷேக் கபூர் தெரிவித்தார்.
சரி.. கை போ சே என்றால் என்ன அர்த்தம் என்றுதானே கேட்கிறீர்கள்... காத்தாடி விடும்போது, போட்டிக் காத்தாடியின் கயிறை அறுத்துவிட்டு டீல் என்று கத்துவோமே... அதுதான் கை போ சே. இது குஜராத்தி வார்த்தை. அங்கு காத்தாடி விடும்போது அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான் இந்த கை போ சே!!
Post a Comment