தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள்தான் இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த இரு மொழிகளிலும் முதலிடம் பிடிப்பவர் யாரோ... அவர் பாலிவுட் நடிகர்களையும் மிஞ்சியவராகப் பார்க்கப்படுகிறார்.
பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், தெலுங்கிலோ அல்லது தமிழிலோ நடிக்க ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. காரணம் தமிழ், தெலுங்கு சினிமாவின் வர்த்தக எல்லை அத்தனை தூரம் விரிவடைந்திருப்பதுதான்.
நடிகைகளைப் பொறுத்தவரை இந்த இரு மொழிகளுக்கும் பொதுவானவர்களாகவே உள்ளனர். நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, அமலா பால், ஹன்சிகா என முன்னணி நாயகிகள் அனைவருமே இரு மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா-ஹன்சிகா இடையில்தான் நம்பர் ஒன் இடத்துக்கு பெரும் போட்டி நிலவுகிறது.
இதுவரை நயன்தாராவே முதல் இடத்தில் இருக்கிறார். புதிதாக வந்துள்ள ஹன்சிகா வேகமாக நயன்தாரா இடத்துக்கு முன்னேறி வருகிறார்.
தமிழ் தெலுங்கில் மொத்தம் 6 படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள். சம்பளம் கிட்டத்தட்ட 2 கோடி வரை போகிறது.
ஹன்சிகா தமிழில் சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யனும் குமாரு, வாலிபன் என ஏழு படங்களில் நடித்து வருகிறார். 2015 வரை அவரிடம் தேதிகள் இல்லை. ஆனாலும் இன்னும் 5 புதிய படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். சம்பளமும் கிட்டத்தட்ட நயன்தாரா வாங்குவதை நெருங்குகிறதாம்.
இதையெல்லாம் விட முக்கியம், நயன்தாராவின் முன்னாள் காதலன் சிம்புவுடன் மகா நெருக்கமாகிவிட்ட ஹன்ஸி, அவருடன் மட்டுமே 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதுதான்.
இப்போ சொல்லுங்க.. யார் நம்பர் ஒன்?
Post a Comment