சென்னை: ஒரே படத்தின் மூலம் ஓகோ?! என்று புகழடைந்துவிட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் இப்போது விளம்பரத்திலும் தலை காட்டத் தொடங்கிவிட்டார். அதுவும் நமீதாவின் ஜோடியாக நடிக்கிறார் என்பதுதான் விசேசம். இதற்காக தனது சம்பளத்தில் 30 சதவிகிதம் டிஸ்கவுண்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் இருந்து‘எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நமீதா. சினிமா வாய்ப்பு குறைந்த உடன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டினார். விளம்பரத்திலும் வந்தார். இப்போது டிவி வாய்ப்பும் இல்லாமல் போகவே ரியல் எஸ்டேட், கடை திறப்பு விழா என கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் நடித்த கிஸ்... கிஸ்... கிஸ்கால் விளம்பரம் பிரசித்தி பெற்றது. பட வாய்ப்பே இல்லாத சூழலில் கூட ஹீரோயின் ரேஞ்சில் இருந்த நமீதா இப்போது ‘பவர்ஸ்டாருடன்' ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்திருப்பது சினிமாவில் இல்லை, கிஸ்கால் இரும்புக்கம்பி விளம்பர படத்தில். இரும்பு கம்பிகளை கைகளில் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த நமீதா இனி தனியாக நிற்காமல் பவர் ஸ்டாருடன் ஜோடியாக நிற்பார்.
சினிமாவில் கால்சீட் ஃபுல்லாக இருக்கும் பவர் ஸ்டார் இரும்புக் கம்பி விளம்பரத்தில் நமீதா உடன் ஜோடி என்ற உடன் நடிக்க பேசிய சம்பளத்தில் இருந்து 30 பர்சண்ட் டிஸ்கவுண்ட் செய்து கொண்டாராம்.
அப்ப இனி நமீதா மச்சான்ஸ் மறந்துறாதீங்க... கிஸ்.. கிஸ்.. கிஸ்கால் என்று பவர் ஸ்டாரைப் பார்த்து கூறுவாரோ?
Post a Comment