ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எப்போதுமே அடுத்த படம் பற்றி எந்த தகவலையும் கசிய விடமாட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
தனது மகள் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கோச்சடையான்' ரிலீஸ் வரைக்கும் தனது அடுத்த படத்தை பற்றி பேச வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார் அவர்.
இதற்கு காரணம், தற்போது தம்மைப் பற்றி வெளியாகும் செய்திகள் முழுவதும், ‘கோச்சடையான்' படம் தொடர்பானதாகவே இருக்க வேண்டும் என்பதனால்தான்.
ஆனால் கோச்சடையானை தயாரிக்கும் ஈராஸ் பட நிறுவனம், அடுத்ததாகவும் ரஜினியை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும், அதை கே.வி.ஆனந்த் இயக்குவதாகவும் அறிவித்துவிட்டது. ஈராஸ் நிறுவத்தின் சார்பில், அந்த நிறுவனத்தின் முதன்மை நிதித்துறை அதிகாரி கமால் ஜெயின் அந்த அறிவிப்பை வெளியிட்டார்
ரஜினியின் திட்டத்தையும் மீறி அப்படியொரு அறிவிப்பு வர என்ன காரணம்? அதுவும் அவர்களது சி.எஃப்.ஓ.வை வைத்து அறிவிப்பை ஏன் வெளியிட்டார்கள்? என்றார் காரணமில்லாமல் இல்லை.
ஷேர் மார்க்கெட்டில் ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்வதற்காக செய்யப்பட்ட யுக்திதான் இது என்கிறார்கள்.
ஈராஸ் நிறுவனம், கடந்த 13-ம் தேதி தமது வருமானம், கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளது என அறிவித்தது. இருந்தும், பங்குகளின் விலை உயரவில்லை. இதையடுத்து கடந்த மாத இறுதியில் ரஜினி படம் பற்றிய அறிவிப்பை ஈராஸ் நிறுவனத்தின் முதன்மை நிதித்துறை அதிகாரி வெளியிட்டார். அதையடுத்து, ரூ.195-200 ரேஞ்சில் ஈராஸ் பங்குகள் விற்பனையாகின. தற்போது பழையபடி ரூ180-185 ரேஞ்சுக்கு வந்துவிட்டனவாம்.
Post a Comment