விஸ்வரூபம் முதல் பாகத்தில் மிஸ்ஸானதையெல்லாம் 2ம் பாகத்தில் வச்சிருக்கேன்!: கமல்

|

Kamal Gearing Up Release Sequel Viswaroopam

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் முழுமையாக வைக்க முடியாமல் போன காதல், தாய் - மகன் பாசம், போர்க்களக் காட்சிகளை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது. இஸ்லாமியர்கள், தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் புண்ணியத்தில் இந்தப் படம் அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது.

இப்போது படத்தின் அடுத்த பாக வெளியீட்டுக்கு ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் கமல்.

இந்தப் படத்தின் இன்னும் சில காட்சிகளைப் படமாக்கி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டால், வெளியீட்டுக்குத் தயார்தான். பெரும்பகு காட்சிகளை எடுத்த போதே எடிட் செய்து இறுதி வடிவம் கொடுத்துவிட்டதால், அதிக நாட்கள் தேவைப்படாது என்கிறார்கள்.

இந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்து கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில், "விஸ்வரூபம் மூலம் எனக்கு லாபம்தான். நல்ல வேளை, படத்தின் இணை தயாரிப்பாளர் எங்க அண்ணன் என்னை கேள்வி கேட்க வேண்டிய நிலையை படம் ஏற்படுத்தவில்லை.

இந்த இரண்டாம் பாகத்தில் போர்க்களக் காட்சிகள் பிரதானமாக இருக்கும். தவிர, முதல் பாகத்தில் மிஸ்ஸாகிவிட்டதாக ரசிகர்கள் நினைத்த ரொமான்ஸ் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் அதிகம் இருக்கும். அதே போல, அம்மா - மகன் பாசத்தை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன," என்றார்.

 

Post a Comment