ஒரு சிங்கமும் 3 சுண்டெலிகளும்... வயிறைப் பதம் பார்க்கும் 'துள்ளி விளையாடு'!

|

Thulli Vilayadu Is An Ultimate Comedy   

விரைவில் திரைக்கு வரவிருக்கும் துள்ளி விளையாடு படத்தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலராலும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம்.

அப்படியொரு அல்டிமேட் காமெடியாக வந்துள்ளது வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம்.

ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்ததோடு, படம் தங்களை ரொம்பவே மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர்.

இப்போது படத்தை திரையுலக பிரமுகர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர்.

படம் பார்த்த அத்தனைப் பேருமே விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். அத்தனை நகைச்சுவையாக வந்துள்ளதாம் படம்.

இதுகுறித்து கூறுகையில், இது ஒரு சிங்கத்துக்கும், மூன்று எலிகளுக்குமிடையே நடக்கிற தமாஷ் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன். நம்ம பிரகாஷ் ராஜ் சார்தான் சிங்கம், யுவராஜ், சூரி, சென்றாயன் ஆகியோரும்தான் அந்த மூன்று எலிகள். இந்த விளையாட்டோடு தீப்தியின் காதல் விளையாட்டும் சேர காமெடி ப்ளஸ் காதல் கதம்பமாக வந்துள்ளது. பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர்," என்றார் இயக்குநர் செல்வா.

ஸ்ரீகாந்த் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

 

Post a Comment