டெல்லி: பழம்பெரும் இந்தி வில்லன் நடிகர் பிரானுக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவுக்கு எப்படி எம்.என்.நம்பியாரோ அப்படி ஒரு அதி பயங்கர இந்தி வில்லன்தான் பிரான். முன்னணி இந்தி நாயகர்களுடன் இணைந்து நடித்துக் கலக்கியவர் பிரான்.
பிரானுக்கு தற்போது தாதா சாஹேப் பால்கே விருது தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியத் திரையுலகின் உயரிய விருதாக பால்கே விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் திரையுலகுக்கு பிரான் செய்துள்ள அளப்பறிய பங்குக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment