சென்னை: மறைந்த பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தினத்தந்தி அதிபர், கல்வியாளர், விளை யாட்டு ஆர்வலர் சிவந்தி ஆதித்தன் நேற்று இரவு மரணமடைந்தார்.
அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
திரையுலகினரும் போயஸ் கார்டன் சென்று தங்கள் இரங்கலை சிவந்தி ஆதித்தன் உடலுக்கு செலுத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மாலை அணிவித்து தன் இரங்கலைத் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜா, சிவகுமார், அஜித்-ஷாலினி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் டி.ராஜேந்தர், பாக்கியராஜ்-பூர்ணிமா, ராஜேஷ், விவேக், உதயநிதி ஸ்டாலின், மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், நடிகை குஷ்பு-,சுந்தர்சி,நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதிஸ்டாலின் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்தனர்.
Post a Comment