அஜீத் படத்துக்கு தலைப்பு வலை இல்லை!- விஷ்ணுவர்தன்

|

Ajith Vishnuvardhan Film Is Not Valai

அஜீத் படத்துக்கு வலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

அஜீத் – நயன்தாரா, ஆர்யா – டாப்ஸி நடித்துள்ள புதிய படத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயர் அறிவிக்கப்படவில்லை.

தல, வலை என தினந்தோறும் ஒரு பெயர்கள் அடிபட்டன. ஆனால் எதையும் இயக்குநரும் ஹீரோவும் உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பு கூட முடிந்துவிட்டது. அஜீத்தும் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

இந்த நிலையில் ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்து, வலை என பெயர் சூட்டிவிட்டனர். படத்தின் டிசைன் கூட வெளியானது. பலரும் இந்தப் படத்தின் தலைப்பு வலைதான் போலிருக்கு என நினைத்துக் கொண்டிருக்கையில், இப்போது ‘இல்லையில்லை… தலைப்பு இன்னும் வைக்கவில்லை,’ என மறுப்பு தெரிவித்துள்ளார் விஷ்ணுவர்தன்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தனிடம், உங்க படத்துக்கு எப்போதான் தலைப்பை வெளியிடுவீங்க என்று கேட்டபோது, ‘இந்தப் படத்துக்கு இரு தலைப்புகளை யோசித்து வைத்துள்ளேன். ஆனால் நிச்சயம் வலை என்பது தலைப்பல்ல. பின்னர் அறிவிப்போம்,” என்றார்.

வரும் மே 1-ம் தேதி அஜீத் பிறந்த நாள் என்பதால், ஒருவேளை அன்று அறிவிப்பார்களோ என்னமோ!

 

Post a Comment