மிரட்டும் முன்ஜென்மம்... சூர்யபுத்திரி சீரியலில் திருப்பம்

|

Kutti Pathmini S Serial Surya Puthri

சூர்யபுத்திரி தொடரில் இனி முன்ஜென்மக் கதை ஒளிபரப்பாகப் போகிறது. நிழல்கள் ரவி குடும்பத்திற்கு வரும் சிக்கல்கள் எதனால் என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

சூர்ய புத்திரி தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் கிருஷ்ணாவாக நடிக்கும் லாவண்யாவுக்கு எதனால் ராம் (நிழல்கள் ரவி) குடும்பத்தினரின் மீது பகை என்பதையும், கிருஷ்ணா தான் சூர்யபுத்திரி என்பதையும், இனி ஒளிபரப்ப உள்ளனர்.

பல ஜென்மங்களுக்கு முன் சூர்யபுத்திரி எப்படியெல்லாம் ராம் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டாள் என்பதையும், பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம்.

முன்ஜென்ம கதையை கையில் எடுத்திருப்பதால் அதுதொடர்பான பல காட்சிகள் சின்னத்திரை ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்கிறார், சூர்ய புத்திரி தொடரின் தயாரிப்பாளர் குட்டிபத்மினி.

இந்த தொடரில் நிழல்கள் ரவி, ஏ.ஆர்.எஸ், குட்டிபத்மினி, லாவண்யா, ஸபர்ணா, ராஜா, ராஜ்குமார், ஆர்யா, நேபால், குமரேசன், ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, நேஹா, ஸ்வேதா, தீபா, சுஜாதா, டிவி.ராமானுஜம் ஆகியோர் நடித்துள்ளனர். வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ளார் குட்டிபத்மினி, தமிழ் பாரதி இயக்கியுள்ளார்.

 

Post a Comment