புனே: எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு கைதி எண் 16656 ஒதுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத், மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி சரண் அடைந்தார்.
பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து நேற்று புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
சஞ்சய்தத் தனது தண்டனைக் காலத்தில் ஒன்றரை ஆண்டுகளை இதே எரவாடா சிறையில்தான் அனுபவித்து, ஜாமீனில் விடுதலையானார். எனவே அவர் மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும்.
எரவாடா சிறையில் ஏற்கனவே 2 முறை விசாரணை கைதியாக சஞ்சய் தத் இருந்துள்ளார். எனினும், தண்டனை கைதியாக தற்போது இந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சய் தத்திற்கு சீருடையும் '16656' என்ற கைதி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை சிறைக்குள் அவர் தச்சுவேலை செய்தார். தற்போது கடினமாக கூலி வேலை வழங்கப்படும் என தெரிகிறது.
அவரது குடும்பத்தாரிடம் இருந்து மாத அலவன்சாக ரூ.1500 பெற்று சிறை கேண்டீனில் இருந்து அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
மாதமொரு முறை 20 நிமிடங்களுக்கு மட்டும் பார்வையாளர்களைச் சந்திக்க சஞ்சய் தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதி எண் 16656... சஞ்சய் தத் வெளியில் வந்ததும் இதுகூட அவர் படத்துக்கு தலைப்பாகலாம்!
Post a Comment