ஜில்லா படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய மோகன் லால்!

|

Mohan Lal Celebrates His Birthday Jilla Shooting

மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் தனது 53வது பிறந்த நாளை விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாடினார்.

மலையாளத்தில் கடந்த 33 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும்.

மஞ்ஜில் விரிஞ்ச பூக்களில் பூர்ணிமாவுடன் ஜோடியாக நடித்தவர், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஜில்லா படத்தில் அதே பூர்ணிமாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

மோகன்லால் மலையாளியாக இருந்தாலும், அவர் குடியிருப்பது பெரும்பாலும் சென்னையில்தான். அவரது மகன் படித்ததும் சென்னையில்தான்.

தமிழில் இருவர், பாப்கார்ன், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நேசன் இயக்கும் ஜில்லா படப்பிடிப்பு இப்போது சாலக்குடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மோகன்லால் தனது பிறந்த நாளை ‘கேக்' வெட்டி கொண்டாடினார். அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Post a Comment