அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?

|

மே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

நாம் சொன்னது போலவே அது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கும் ராஜா ராணி படத்துக்கான எதிர்மறை விளம்பரம் என்பது அடுத்த சில மணி நேரங்களில் அம்பலமாகிவிட்டது.

இருந்தாலும் அறிவித்தபடி திருமணம் மாதிரி ஏதாவது நடந்ததா என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது.

what about nayanthara arya marriage announcement

அதற்கு 'ஆர்யா நயன்தாரா நிழலா நிஜமா?' என்ற தலைப்பில் ராஜாராணி படத்தின் பிஆர்ஓ அனுப்பியுள்ள இன்னொரு மின்னஞ்சல் விளக்கத்தைப் பாருங்கள்...

"மெய்பொருள் காண்பது அறிவு என்ற இலக்கணத்துக்கு பொருத்தமாக அமைந்தது, உண்மையா அல்லது விளம்பரமா என்ற வாதப் பிரதிவாதத்துக்கு இடையே நிர்ணயிக்கபட்ட இன்று இரவு 9 மணிக்கு வரும் இந்த செய்தி குறிப்பு நிழலை நிஜத்தில் இருந்து பிரித்து காண்பிக்கிறது .

நம்முடைய நிழல் பொய் சொன்னாலும் பிம்பம் பொய்க்காது என்பர்! பிம்பம் அவர்களின் ஒருவர் மீது ஒருவர் காட்டும் உரிமையை பிரதிபலிக்கிறது.

ஒரு சர்ராசரி கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலையும் கூடலையும் கண்ணாடி பிம்பம் போல பிரதிபலிக்கும், ஆர்யா ராஜா ஆகவும், நயன்தாரா ராணி ஆகவும் நடிக்கும் அட்லீயின் 'ராஜ ராணி' திரை படம் எடுக்கப்படும் நேர்த்திக்காகவும், வித்தியாசமான பிண்ணனிக்காகவும், முற்றிலும் மாறுப்பட்ட படைப்பாகும்.

காதல், இசை, ஜனரஞ்சகம் என சகல வெற்றி ஃபார்முலாவுடன் தயாராகும் இப்படத்தை தயாரிப்பவர்கள் பாக்ஸ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இயக்குனர் முருகதாஸ் மற்றும் சண்முகம். வித்தியாசமான விளம்பரம் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த 'ராஜா ராணி' ஈர்ப்பு சக்தி அதிகம் உள்ள படமாக இருக்கும் என கணிக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர்".

-இதுதான் அந்த பிரஸ் ரிலீஸ்.

ரொம்ப புத்திசாலித்தனமா விளம்பரம் பண்றாங்களாமாம்!!

 

Post a Comment