விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

|

Vijay S Thalaiva On June 22   

இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.

காரணம்... இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளில் வெளியிடும் திட்டம்தானாம்.

பொதுவாக விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்றாலும், அது பிரமாண்டமாக இருக்காது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பிக்கப் ஆகும். அவரது சமீபத்திய படங்களே இதற்கு சாட்சி.

நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிட்டால் பெரிய வரவேற்பும், பிரமாண்ட ஓபனிங்கும் கிடைக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரி படப்பிடிப்பை வேகப்படுத்தி முடித்துள்ளார்களாம்.

மும்பை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது ‘டப்பிங்' மற்றும் ரி-ரீக்கார்டிங் பணிகளும் முக்கால்வாசி முடிந்துள்ளதால், ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றனர்.

வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்பு வெள்ளிக்கிழமை இந்தப் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாம்.

முதல் நாள் விஜய் பட ரிலீஸ், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் என டபுள் ட்ரீட் ரசிகர்களுக்கு!

 

Post a Comment