ரஜினி உடல் நிலை குறித்து தன் பெயரில் வெளியான ட்வீட் பொய்யானது, இந்த வேலையைச் செய்தவர்கள் மீது விரைவில் போலீசில் புகார் செய்வேன் என்று நடிகர் விடிவி கணேஷ் கூறினார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று மாலை இவரது பெயரில் வெளியான ட்வீட்டில், "ரஜினிக்கு மாரடைப்பு, மருத்துவமனையில் அனுமதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் கவலைக்குள்ளாகி, பரபரப்போடு விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த ட்வீட்டை தான் அனுப்பவில்லை என்றும், தன் பெயரைப் பயன்படுத்தி சிலர் இந்த மோசடியைச் செய்துள்ளனர் என்றும் அறிக்கைவிட்டார் விடிவி கணேஷ். தான் ட்விட்டரில் இல்லவே இல்லை என்றும் கூறினார்.
ஆனால் விடிவி கணேஷ் என்ற பெயரில் இயங்கும் இந்த கணக்கு கடந்த ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் உள்ளது. சிம்பு போன்றவர்கள் அதைத் தொடர்வது தெரிய வந்துள்ளது.
ஆனால், தொடர்ந்து மறுத்து வரும் கணேஷ், விரைவில் சைபர் க்ரைம் பிரிவில் இதுகுறித்து புகார் தரவிருப்பதாகக் கூறியுள்ளார்.
Post a Comment