கணவன் ஆஞ்சநேயலுவைப் பிரிந்தார் அனன்யா?

|

Ananya Separates From Husband Anjan

நடிகை அனன்யா தன் கணவர் ஆஞ்சநேயலுவைப் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன், எங்கேயும் எப்போதும் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். அனன்யாவுக்கும் திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயலுவுக்கும் 2012-ல் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பிறகு ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் தெரியவர அனன்யாவின் பெற்றோர் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பை மீறி அனன்யா திருப்பதியில் ஆஞ்சநேயலுவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

இதுகுறித்து ஒரு படப்பிடிப்பில் அனன்யாவிடம் கேட்டபோது, "அதெல்லாம் என் சொந்த விஷயங்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பத்திரிகைகளிடம் சொல்ல முடியாது. நான் நடிக்கும் படங்கள் பற்றிக் கேளுங்கள் சொல்கிறேன்," என்றார்.

 

Post a Comment