முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு குளுகுளு நாட்கள் என தலைப்பிட்டுள்ளனர்.
காதர்ஹாசன் இயக்கும் இந்தப் படம் கல்லூரி காதலை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் காதர்ஹாஸன் கூறுகையில், "காதலைப் பொருத்தவரை ஆண்களுக்கு ஜாலியாக அல்லது விளையாட்டாகக் கூட இருக்கலாம். பெண்களுக்கு அது நேர் எதிர். சாமான்யமாக ஒருத்தனைக் காதலித்துவிட மாட்டார்கள். அப்படி காதலித்துவிட்டால், அதில் தீவிரமாக இருப்பார்கள். காதலை உயிர் மாதிரி பார்ப்பார்கள்.
இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பசங்க ஒரு பெண்ணை காதலிக்கும் போது கூட, வளைவு நெளிவுகளுடன் இன்னொருத்தியை பார்த்துவிட்டால் ட்ரை பண்ணலாமான்னு நினைப்பார்கள். ஆனால் பெண்கள் ஒருத்தனை காதலித்துவிட்டால் அதன்பிறகு எவ்வளவு பெரிய மன்மதன் வந்து நின்றாலும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். அந்தமாதிரி ஒரு கருவை மையப்படுத்தி நகர்வதுதான் குளு குளு நாட்கள்," என்றார்.
ஸ்ரீஜித் விஜய், ஹ்ரிஷ், ஷாஃபி, அர்ஜூன், மாளவிகா, சுபிக்ஷா, தீபா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் அறிமுகமாகின்றனர்.
எம். எஸ். பாஸ்கர், யுவராணி, டி பி. கஜேந்திரன் ஆகிய அனுபவஸ்தர்களும் உண்டு.
போக்கிரி படப் புகழ் வசனகர்த்தா வி. பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். கதை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் காதர்ஹாசன். சென்னை மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
Post a Comment