வழக்கு எண் 18/9, சாட்டை படங்களுக்கு தமுஎச விருது

|

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9, எம்.அன்பழகன் இயக்கிய சாட்டை, சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 2012ம் ஆண்டிற்கான திரைப்பட விருது விழா வரும் 25ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி பங்கேற்று பேசுகிறார். கவிஞர் நந்தலாலா, கவிஞர் சைதை ஜெ. இயக்குநர் எஸ். கருணா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

Vazhakku En 18/9

வழக்கு எண் 18/9, நீர்ப்பறவை, சாட்டை போன்ற படங்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மதுபானக்கடை படத்திற்கு புதிய முயற்சிக்கான விருது வழங்கப்பட உள்ளது. மௌனமொழி என்ற குறும்படத்திற்கு பா.ராமச்சந்திரன் நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

Saattai Movie Still

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நாடகக்கலைஞர் கி.அன்பரசன், நாடகக்கலைஞர் ஜெ. ஜேசுதாஸ், மாநிலப் பொதுச்செயளாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

Post a Comment