'அட்டகத்தி' தினேஷ்-மாளவிகா நாயரின் 'குக்கூ'!

|

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ‘குக்கூ' படத்தின் பூஜை ஜூலை 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லிங்குசாமி, இயக்கநர் பாலா உள்ளிட்ட பிரபல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் பங்கேற்று படத்தின் இயக்குநர் ராஜுமுருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியான 'வட்டியிலும் முதலும்' பகுதியை எழுதியர் ராஜு முருகன். இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் இப்போது இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘குக்கூ'.

'அட்டகத்தி' தினேஷ்-மாளவிகா நாயரின் 'குக்கூ'!

'குக்கூ' படத்தின் நாயகனாக 'அட்டகத்தி' தினேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாளவிகா நாயர். இவர் 'வழக்கு எண் 18/9' படத்தின் மலையாள ரீமேக்கான 'Black Butterflies' படத்தில் நாயகியாக நடித்தவர்.

ஞாயிறன்று இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த விழாவில் இயக்கநர் லிங்குசாமி, இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். திங்கட்கிழமை முதல் தொடர் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

'அட்டகத்தி' தினேஷ்-மாளவிகா நாயரின் 'குக்கூ'!

இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், 'குக்கூ' படத்தின் படத்தின் மூலம் நேரடியாக தமிழில் தயாரிப்பு களத்தில் இறங்குகிறது. இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இவர் 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' போன்ற படங்களில் இசையமைத்தவர். ஒளிப்பதிவாளராக பிரேம்நாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

Post a Comment