நடிகை லீனா மரியாவின் காதலன் மீண்டும் மோசடி வழக்கில் கைது

|

நடிகை லீனா மரியாவின் காதலன் மீண்டும் மோசடி வழக்கில் கைது

சென்னை: தொழிலதிபர் ஒருவரிடம் 75 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக நடிகை லீனா மரியா பால் காதலனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

மெட்ராஸ் கபே, ரெட் சில்லிஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த லீனா மரியா பாலின் காதலன் சுகாஷ் சந்திரசேகர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து, சென்னை, அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில், போலி ஆவணம் தயாரித்து, 19 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் பதுங்கியிருந்த லீனா பால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிடிப்பட்டார். காதலன் சுகாஷ் தப்பினார். லீனா மரியா பாலை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த சுகாஷை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், மோசடி வழக்கு ஒன்றில், டெல்லி போலீசாரும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த சுகாஷை டெல்லி போலீசார் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

இந்த நிலையில், சுகாஷ், சேலையூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 75 லட்சம் மோசடி செய்த வழக்கில் அவரை மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

சென்னை தொழிலபதிகளிடம் 20 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார் சுகார். எனவே டெல்லியில் இருந்து சுகாஷை சென்னை அழைத்து வர காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை மூலம் அவரை சென்னை கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Post a Comment