லண்டன்: தனது மூத்த சகோதரி சார்லெட் எமிலியின் மறைவால் அவரது இளைய தம்பியான பாரிஸ் பிராஸ்ன் பெரும் வருத்தமடைந்துள்ளார்.
பியர்ஸ் பிராஸ்னின் முதல் மனைவியான காஸன்ட்ராவின் மகள் சார்லெட் தனது 41வது வயதில் புற்றுநோய்க்கு மரணமடைந்துள்ளார். இதனால் பிராஸ்னன் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சார்லெட்டின் மரணம் குறித்து பிராஸ்னின் 2வது மனைவி கீலி ஷேவ் ஸ்மித்துக்குப் பிறந்தவரான 12 வயது பாரிஸ் சோகமும், உருக்கமான இரங்கலும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
டியர் சார்லெட், நீ ஒரு அதிசயக்கத்தக்க சகோதரி. அருமையானவர்கள் எல்லாம் சீக்கிரமே மரணித்துப் போகிறார்கள். நீ அவர்களில் ஒருவர்.
நான் சிறு குழந்தையாக இருந்தபோது என் கைப்பிடித்து நடத்திக் கூட்டிச் சென்றது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது நான் வளர்ந்து விட்டேன். ஆனாலும் உன் கைப்பிடியை நான் மறக்கவில்லை. நான் பார்த்ததிலேயே மிகவும் ஆச்சரியமான பெண் நீதான். உண்மையான போராளி.
நான் உன்னை மிஸ் பண்ணப் போகிறேன். தினசரி உன்னை நினைத்துப் பார்க்கப் போகிறேன்.
எனக்கு நீதான் மிகப் பெரிய உந்துசக்தி. போராட்டம்தான் வாழ்க்கை என்பதை கற்றுக் கொடுத்தவள் நீ. அன்பு செலுத்தக் கற்றுக் கொடுத்தவள் நீ. எனது இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்.
நான் பிறந்தபோது நீ என்னை கையில் தாங்கி நின்ற புகைப்படத்தை காலையிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை. அழுது கொண்டே இருக்கிறேன்.... நீ எங்களுடனேயே இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது.
உன்னுடைய கடைசி வார்த்தை என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது அருகில் இல்லாமல் போனதற்காக வருந்துகிறேன். நிச்சயம் ஒரு நாள் உன்னை வந்து சந்திப்பேன்... அதுவரை நம் குடும்பத்தை நீ பார்த்துக் கொண்டிரு....!
Post a Comment