சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் சமையல் சார்ந்த ஒர் அற்புதமான நிகழ்ச்சி ‘ஃபுட் பவுல்' .
இந்திய கலாச்சாரத்தில் உணவுக்கு முக்கியமான இடம் உண்டு. சர்வதேச அளவில் இந்திய சமையல் முறைகள் தனித்துவம் வாய்ந்தவையாகவே உள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அப்பகுதிகளின் உணவு முறைகளை கண்டறிந்து பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
சுவையான பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் உள்நாட்டு உணவு விடுதிகளில் தொடங்கி பன்னாட்டு நட்சத்திர உணவு விடுதிகள் வரை இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. உணவு குறித்த சூட்சும தகவல்களை வழங்கும் நிகழ்ச்சியாக திகழ்கிறது ஃபுட் பவுல் அல்லது உணவுக் கிண்ணம்.
இந்நிகழ்ச்சியானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது . இதன் மறு ஒளிபரப்பை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை, காலை 11.00 முதல் 11.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 4.30 வரை மறு ஒளிபரப்பாகவும் பார்க்கலாம்.
Post a Comment