டோலிவுட்டில் 'அதகளம்' செய்ய ஹரிக்கு ரூ.5 கோடி சம்பளம்

|

டோலிவுட்டில் 'அதகளம்' செய்ய ஹரிக்கு ரூ.5 கோடி சம்பளம்

சென்னை: இயக்குனர் ஹரி ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் படம் இயக்க ரூ.5 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

ஹரியின் மார்க்கெட் சிங்கத்தால் எகிறிக் கிடக்கிறது என்று தான் கூற வேண்டும். ஹரி சிங்கம் 2 படத்தை முடித்த கையோடு கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை எடுப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் சில பல காரணங்களால் அருவா டிராப்பாகி ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்துவிட்டனர் என்று செய்தி வந்தது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கிலும் ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்க ஹரியை அழைத்தார்களாம். சும்மா இல்லை ரூ.5 கோடி சம்பளம் தருகிறோம் வாருங்கள் என்றார்களாம்.

உடனே ஹரி தெலுங்கிலும் அதகளம் பண்ண தயாராகிவிட்டாராம். இந்த கேப்பில் தான் கார்த்தி படம் கைவிடப்பட்டதாம்.

 

Post a Comment