மதகஜராஜா... ஜெமினியிடமிருந்து வாங்கி சொந்தமாக வெளியிடும் விஷால்!

|

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் தான் நடித்து வெளியாகாமலிருக்கவம் மதகஜராஜா (எம்ஜிஆர்) படத்தை ஜெமினி நிறுவனத்திடமிருந்து தானே வாங்கி சொந்தமாக வெளியிடுகிறார் ஹீரோ விஷால்.

விஷால் - அஞ்சலி - வரலட்சுமி - சந்தானம் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய படம் மதகஜராஜா. இந்தப் படம் கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை.

இந்தப் படம் முடிந்த பிறகு, விஷால் நடித்த சமர், பட்டத்து யானை போன்ற படங்கள் வெளியாகிவிட்டன.

மதகஜராஜா... ஜெமினியிடமிருந்து வாங்கி சொந்தமாக வெளியிடும் விஷால்!

அடுத்து வரும் தீபாவளிக்கு விஷால் நடித்த பாண்டிய நாடு படம் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் அதற்கு முன் மதகஜராஜாவை வெளியிட விரும்பிய விஷால், அந்தப் படத்தை தனது சொந்தப் பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டர் மூலம் வெளியிடுகிறார்.

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் விஷால்.

 

Post a Comment