சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஃபா)வில் வெளியானது.
கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. சர்வதேச தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் இது.
இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அசத்தலான ட்ரைலர், கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அன்று வெளியாகவில்லை. மாறாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
ரா அதிகாரியாக கமல் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவருடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் குப்தா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழில் கமலுடன் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தியில் ஏக்தா கபூரும், ஷோபா கபூரும் தயாரித்துள்ளனர். எம் கிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியாகவிருக்கிறது.
Post a Comment