300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

|

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் திரைப்படம் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

மிகப் பெரிய பட்ஜெட்டில், ஒரு கற்பனை உலகத்தில், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்ட படம் ‘இரண்டாம் உலகம்'.

தீபாவளிக்கே வர வேண்டிய படம். தியேட்டர்கள் சரிவர கிடைக்காததால் இந்தப் படத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்தார்கள். இப்போது திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றன. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக 'ஆரம்பம்', 'பாண்டிய நாடு' படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் 'இரண்டாம் உலகம்' படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது. மேலும் நல்ல அரங்குகளில் வெளியானால்தான் இந்தப் படத்தை ரசிக்க முடியும்.

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இப்படம் 'வர்ணா' என்ற பெயரில் வெளியாகிறது.

ரசிகர்களுக்கு வித்தியாசமான படம் பார்த்த அனுபவத்தைத் தர வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தை உருவாக்கியதன் நோக்கம் என்று இயக்குநர் செல்வராகவன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

Post a Comment