இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் அதிகம் நடக்க ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் இருக்கு ஆனா இல்ல படத்தின் இசை வெளியீடு குவைத்தில் நடக்கிறது. இதில் வேந்தர் மூவீஸ் பாரிவேந்தர் கலந்து கொள்கிறார்.
இருக்கு ஆனா இல்ல படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஈடன், விவாந்த், மனிஷா ஸ்ரீ இப்படி படத்தின் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களே.
ஒய்.ஜி.மகேந்திரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை கே.எம்.சரவணன் இயக்குகிறார். ஷமீர் இசையமைத்திருக்கும் இப்படத்தை வரம் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இப் படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்கிறது. அதே வேளையில் படத்தின் ஆடியோவை வெளிநாட்டில் வெளியிடவிருக்கின்றனர். இன்று மாலை வெள்ளிக்கிழமை குவைத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் ஆடிட்டோரியத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்படவிருக்கிறது.
இந்த விழாவிற்கு வேந்தர் மூவீஸ் நிறுவன அதிபர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். இப்படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment