திருவனந்தபுரம்: கணவரிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்ற மம்தா மோகன்தாஸ் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க போன் தமிழ்ப் படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாளப் படங்கதளிலும் நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.
மம்தா மோகன்தாசுக்கு சில வருடங்களுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சைப் பெற்று, பின் உடல் நிலை தேறி வந்து நடித்தார். புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
2011-ல் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் மம்தா மோகன்தாசுக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் குடும்ப வாழ்க்கை கசந்து இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு மலையாள படங்களில் மம்தா தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மம்தா கூறுகையில், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளே, நம்மை மேலும் வலுவாக்குகின்றன. மனதளவில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நோயில் இருந்து மீண்டு வருவேன்," என்றார்.
Post a Comment