சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் அருமையாக உள்ளது என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் நாள் அன்று மட்டும் படம் ரூ.9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆரம்பம் படத்தை இயக்குனர் லிங்குசாமி பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆரம்பம் படம் சூப்பர்ப்..! அஜித்துக்கும் ரசிகர்களுக்கும் உள்ள உறவை நன்கு புரிந்து காட்சிகளை அமைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். ஆர்யா கூல்! என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment