பூனம் பாண்டேவின் கன்னட பட ஹீரோ ராஜேஷ் மாடியில் இருந்து விழுந்து மரணம்

|

மைசூர்: கன்னட நடிகர் ராஜேஷ் மைசூரில் உள்ள தனது வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்ததில் மரணம் அடைந்தார்.

கன்னட நடிகர் ராஜேஷ்(28) பூனம் பாண்டே நடிக்கும் லவ் இஸ் பாய்சன் படத்தின் ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. இந்நிலையில் அவர் நேற்று மைசூரில் உள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் மரணம் அடைந்தார்.

பூனம் பாண்டேவின் கன்னட பட ஹீரோ ராஜேஷ் மாடியில் இருந்து விழுந்து மரணம்

முன்னதாக அவர் மனநல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ராஜேஷின் தாய் லக்ஷ்மி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,

எனது மகன் செல்போனில் அழைப்பு வந்துவுடன் பேசுவதற்காக மாடிக்கு சென்றான். அவனுக்கு அடிக்கடி மயக்கம் வரும் என்பதால் அவன் மதியம் 12.40 மணி அளவில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டான் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று காலை ராஜேஷும், அவரது தாயும் சாமுன்டி ஹில்ஸுக்கு வாடகை காரில் சென்றுள்ளனர். வரும் வழியில் ராஜேஷ் தான் மலையில் இருந்து குதிக்க வேண்டும் காரை நிறுத்து என்று டிரைவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன டிரைவர் காரை வேறு வழியாக ஓட்டி வந்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டுள்ளார். அப்போது தாயும், மகனும் வீட்டு வாசலிலேயே சண்டை போட்டுள்ளனர்.

 

Post a Comment