விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசுங்க!

|

சென்னை: விஜய் சேதுபதி தனக்கு வரும் பட வாய்ப்புகளை தனது நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறார்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என்று தொடர்ந்து கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவான அவர் தற்போது பிசியோ பிசி.

கையில் 8 படங்களை வைத்துக் கொண்டு ஓடி ஓடி நடிக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் ஃபுல்லாக உள்ளது. இருப்பினும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசுங்க!

அப்படி தன்னை தேடி வருபவர்களிடம் தனது நண்பேன்டா நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்களை நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்கிறாராம். எனக்காக காத்திருக்காதீர்கள், இவர்களில் யாரையாவது நடிக்க வையுங்கள் என்கிறாராம்.

விஜய் சேதுபதிக்கு தான் எவ்வளவு பெரிய மனசு என்று அவர் பரிந்துரைக்கும் நடிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

Post a Comment