கமலின் விஸ்வரூபம் 2 - பிப்ரவரிக்கு தள்ளிப் போனது!

|

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதியை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

பிப்ரவரி 2-வது வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

கமலின் விஸ்வரூபம் 2 - பிப்ரவரிக்கு தள்ளிப் போனது!  

கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்தினை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பொங்கலன்று படத்தை வெளியிடத் திட்டமிருந்தார் கமல். ஆனால் அந்தத் தேதியில் ரஜினியின் கோச்சடையான் உள்ளிட்ட படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிரம நிலை ஏற்பட்டது.

எனவே ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளிப் போட்டார் கமல். இப்போது ஜனவரி 26-ம் தேதி ரஜினி படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே கமல் மூன்று வாரங்கள் தன் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார்.

இம்மாத இறுதியில் படத்தை சென்சாருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார் கமல்.

 

Post a Comment