சென்னை: செக் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் துறையூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தொழில் அதிபர் வரதராஜன் என்பவருக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ. 30 லட்சத்திற்கான செக் ஒன்றை கொடுத்தார். அந்த செக்கை வங்கியில் போட்டபோது பணமின்றி அது திரும்பி வந்தது. இதையடுத்து வரதராஜன் பவர் ஸ்டார் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 10ம் தேதி பவர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதையடுத்து பிடிவாரண்ட்டை நீதிபதி எழில் வேலன் ரத்து செய்தார். மேலும் வழக்கை வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்த அவர் அன்றைய தினமும் பவர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
Post a Comment