பிரசாந்த் நடிப்பில் ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு ஜீன்ஸ் 2 என இப்போதைக்கு தலைப்பு பதிவு செய்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பிரசாந்த்.
சமீபத்தில் அவர் நடிப்பில் மம்பட்டியான் மற்றும் பொன்னர் சங்கர் ஆகிய இரு படங்கள் வெளியாகின.
ஆனால் அதன் பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நல்ல கதைக்காக காத்திருப்பதாகக் கூறி வந்தார்.
இப்போது அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்கவிருக்கிறார் பிரசாந்த். அவற்றில் ஒன்று ஜீன்ஸ் படத்தின் தொடர்ச்சி. இந்தப் படத்தை அநேகமாக பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குவார் என்று கூறப்பட்டது.
முதல் பாகத்தில் நடித்தவர்களையே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்வதாக பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹீரோயினாக ஐஸ்வர்யா நடிப்பாரா என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் 2014-ல் தொடங்குகிறது.
மற்றொரு படத்தின் ஷூட்டிங்கும் இதற்கடுத்து தொடங்கும் என பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த இரண்டாவது படத்தை புதிய இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.
Post a Comment