அஜீத் படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

|

அஜீத் படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

சென்னை: கௌதம் மேனன் அஜீத்தை வைத்து எடுக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தியாம்.

அஜீத் குமாரின் வீரம் படம் ஹிட்டாகியுள்ளது. வீரம் படத்தை அடுத்து அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். இந்நிலையில் இப்படத்தில் அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

சிம்புவை அஜீத்துடன் நடிக்க வைக்க கதையில் சில மாற்றங்களை கௌதம் செய்ததாக பேசப்பட்டது. ஆனால் சிம்பு அஜீத்துடன் கௌதம் இயக்கத்தில் நடிக்கவில்லையாம். அது எல்லாம் வெறும் வதந்தியாம்.

 

Post a Comment