சூர்யா படத்துக்குப் பெயர் கல்யாணராமனா? - வெங்கட் பிரபு விளக்கம்

|

சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்துக்கு கல்யாண ராமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் இப்போது நடித்து வருகிறார் சூர்யா.

இந்தப் படம் முடிந்ததும் சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்குகிறார். இதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. அஞ்சான் வசனப் பகுதிகள் முடிந்ததுமே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா.

சூர்யா படத்துக்குப் பெயர் கல்யாணராமனா? - வெங்கட் பிரபு விளக்கம்

இப்படத்துக்கு 'கல்யாண ராமன்' என பெயரிடப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

ஆனால் இயக்குநர் வெங்கட் பிரபு இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், "கல்யாண ராமன்' என்ற பெயரை நாங்கள் தேர்வு செய்யவில்லை. என்ன தலைப்பு வைப்பது என்பது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம்," என்றார்.

இந்த படத்தை '3டி'யில் எடுக்கவும் வெங்கட் பிரபு ஆலோசனை செய்து வருகிறார்.

 

Post a Comment