'நீ எங்கே என் அன்பே' - நயன்தாரா நடிக்கும் அனாமிகாவுக்கு தமிழ் தலைப்பு இது!

|

நயன்தாரா நடிக்கும் கஹானி ரீமேக்கின் தமிழ்ப் பதிப்புக்கு நீ எங்கே என் அன்பே என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி'. இப்படம் காணாமல் போன கணவனைத் தேடிச் செல்லும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மோஷன் பிக்சர்சின் முதல் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் உருவாகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படம் என்பதால் நீண்ட நாட்களாக நல்ல தலைப்புக்கு தேடி வந்தனர். அவள், பெண் போன்ற தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு கைவிடப்பட்டன.

'நீ எங்கே என் அன்பே' - நயன்தாரா நடிக்கும் அனாமிகாவுக்கு தமிழ் தலைப்பு இது!

தற்போது ‘நீ எங்கே என் அன்பே' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இப்படத்திற்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

‘பெண்களை கவரும் வண்ணம் உள்ள இக்கதையில் நயன்தாரா அருமையாக நடித்துள்ளார். மேலும் இந்தியில் வித்யாபாலன் நடித்து புகழ் பெற்ற பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகூட்டி வருகிறார். நீ எங்கே என் அன்பே' என்ற தலைப்பு கதைக்கு மிகவும் பொருந்த கூடிய தலைப்பு,' என்கிறார் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா. தெலுங்கில் பல வெற்றிப் படங்கள் தந்த இவரது முதல் தமிழ்ப் படம் இது.

இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இப்படம் ‘அனாமிகா' என்னும் தலைப்பில் உருவாகி வருகிறது.

 

Post a Comment