மிஷ்கின் படத்தை தயாரிக்கும் பாலா!

|

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தை தன் சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் இயக்குநர் பாலா.

சமீபத்தில் மிகப் பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டுகளைக் குவித்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இளையராஜா இசையில், ஸ்ரீ, மிஷ்கின் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா, தான் கண்ணீர் விட்டு அழுததாகவும், தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் மிஷ்கின் என்றும் தெரிவித்திருந்தார்.

மிஷ்கின் படத்தை தயாரிக்கும் பாலா!

இந்த நிலையில், மிஷ்கின் - பாலா சந்திப்பு நடந்தது. அப்போது மிஷ்கின் சொன்ன ஒரு ஒன்லைன் பாலாவுக்கு மிகவும் பிடித்துவிட, அந்தக் கதையை தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாலா கூறுகையில், "மிஷ்கின் கூறிய ஒன் லைன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதைத்தொடர்ந்து படத்தின் ஸ்க்ரிப்டை எழுதச் சொல்லிவிட்டேன். நானே இப்படத்தை தயாரிக்கிறேன்," என்றார்.

மார்ச் மாதத்திற்குள் இந்த வேலை முடித்துவிட்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க முடிவுசெய்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இந்தப் படத்துக்கும் இளையராஜாவே இசையமைப்பார் என்று தெரிகிறது.

 

+ comments + 1 comments

Anonymous
12 February 2014 at 04:44


ONE IS EXCENTRIC OTHER ON EIS PSYCHO
GOOD CPMBINATION
CAN EXPECT AMENTAL SCRIPT

Post a Comment