பணப் பிரச்சினையால் நேற்று வெளியாகாமல் நின்ற நிமிர்ந்து நில் படம், இன்று மாலை முதல் அறிவிக்கப்பட்ட அனைத்து அரங்குகளிலும் வெளியாகிறது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடிப்பில் உருவான படம் நிமிர்ந்து நில்.
மார்ச் 7-முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியாகவில்லை. பணப் பிரச்சினை காரணமாக படம் நேற்று நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி தற்கொலை செய்து கொண்டதாக வேறு வதந்தி பரவியது. பின்னர் சமுத்திரக்கனியே இதனை மறுத்தார்.
இந்த நிலையில் படத்தின் பணப் பிரச்சினை செட்டில் செய்யப்பட்டதால், இன்று மாலைக் காட்சியிலிருந்து அறிவிக்கப்பட்ட அனைத்து அரங்குகளிலும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment