இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சனா கான் வெள்ளிக்கிழமை மாலை நேரிட்ட கார் விபத்தில் பலியானார்.
சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது. இதில், சனா கான் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர், படுகாயமடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment