சென்னை: நடப்பவற்றை எல்லாம் பார்த்தால் மில்க் நடிகைக்கு நேரமே சரி இல்லை போன்று.
பறவை படம் மூலம் பிரபலமானவர் மில்க் நடிகை. அப்படியே மெல்ல மெல்ல வளர்ந்து தளபதி ஜோடியாக லீடர் படத்தில் நடித்தார். லீடர் படம் ஹிட்டாகும் கோலிவுட்டில் நாம் பெரிய நடிகை ஆகலாம் என்று மில்க் நடிகை நம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் லீடர் படம் ஊத்திக் கொண்டதால் அவரது நம்பிக்கை வீணாகப் போனது. இதையடுத்து அவர் கனி இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் தனக்கு கனமான கதாபாத்திரம் என்றும், படம் ரிலீஸான பிறகு தனது மார்க்கெட் கூடிவிடும் என்றும் நடிகை நம்பிக்கையுடன் இருந்தார்.
இந்நிலையில் ஹீரோ சம்பள பாக்கி கேட்டு பிரச்சனை செய்ததால் படம் இன்று ரிலீஸாகவில்லை. இதனால் நடிகையின் எதிர்பார்ப்பு மீண்டும் வீணாகிப் போகியுள்ளது.
நடப்பவை எல்லாம் பார்க்கையில் நடிகைக்கு நேரமே சரி இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
Post a Comment