சென்னை: நிஜ வாழ்க்கையில் நான் குடிச்சதோ புகை பிடிச்சதோ இல்லை என்று சத்தியம் செய்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் அறிமுகமானதிலிருந்து அவரது பெரும்பாலான படங்களில் நடிக்கும் காட்சிகளைவிட சரக்கடிக்கும் காட்சிகளில்தான் அதிகம் தோன்றியிருப்பார்.
அவரது சமீபத்திய ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் டாஸ்மாக் பாரில் பாடல் காட்சி இடம்பெற்றது. பீரை அவர் காதல் தோல்வி மருந்து என்று சொல்லித்தான் கடையில் கேட்பார்.
இது சரியா... புகைக்கும் குடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர், "நான் சத்தியமா நிஜத்தில் குடிச்சதே இல்லை. புகைப் பிடிச்சதும் இல்லை. ஆனா படத்தின் காட்சிக்குத் தேவை எனும்போது அதற்கு மறுப்பு சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகன் கிடையாது. எனது அடுத்த படமான டாணாவில் மது, புகை காட்சிகளே இருக்காது.
இனி வரும் படங்களில் புகைக்கிற, மது குடிக்கிற காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்," என்றார்.
Post a Comment