பாரதிராஜா ஜோடியாகிறார் மயிலு ஸ்ரீதேவி!

|

ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி.

பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜாவால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் மயிலுவாக வந்து மக்கள் மனங்களில் அமர்ந்தார். அதன் பிறகு இந்தியத் திரையுலகில் இணையற்ற நட்சத்திரமாக வலம் வந்தார்.

பாரதிராஜா ஜோடியாகிறார் மயிலு ஸ்ரீதேவி!

திருமணம் முடிந்து இப்போது அவரது இரு மகள்களும் நடிப்பு மாடலிங் என்று களமிறங்கியுள்ள நிலையில், மீண்டும் முழுவீச்சில் நடிக்கக் கிளம்பிவிட்டார் ஸ்ரீதேவி.

அவரது மறுபிரவேசப் படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் நல்ல வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார் ஸ்ரீதேவி.

தமிழில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இயக்குநர் பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். இப்படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் மயிலு ஸ்ரீதேவிதான்.

இயக்குநர் பாரதிராஜா ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு மூலம் மிகச் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இப்போது பல இயக்குநர்களும் பாரதிராஜாவை தங்கள் படங்கள் முக்கிய வேடமேற்கக் கேட்டு வருகின்றனர்.

 

Post a Comment