கவர்ச்சிப் புயலாக மாறும் இளம் நடிகை

|

சென்னை: இத்தனை நாட்களாக கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யமான நடிகை இனி அதிரடியாக கவர்ச்சியில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.

நடிப்புக்கு பெயர் போன நித்யமான நடிகை கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார். ஆளும் சற்று பூசினாற் போல் உள்ளதால் அவரது உடல் வாகுக்கு கவர்ச்சி ஒத்து வராது என்று கூறி வந்தார்.

இந்நிலையில் சக நடிகைகள் ஆளாளுக்கு போட்டி போட்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கிறார்கள். அவர்களின் மார்க்கெட்டும் எகிறுகிறது. இதை பார்த்த நடிகை இனியும் போர்த்திக்கிட்டே இருந்தால் வேலைக்கு ஆகாது. நாமும் கவர்ச்சி கோதாவில் குதித்துவிட வேண்டியது தான் என்று முடிவு செய்துள்ளாராம்.

தமிழ், மலையாளம் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் நடிக்கும் அவரின் புதிய அவதாரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Post a Comment