கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகை டயான் க்ரூகர் தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு தனது வீட்டையே பரிசாக அளித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை டயான் க்ரூகர்(37). அவர் தனது வீட்டில் பலகாலமாக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தனது வீட்டை பரிசாக அளித்துள்ளார். மேலும் பணிப்பெண்ணின் குடும்பத்தார் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்தபோது அவர்களின் பயண செலவு மற்றும் சட்ட செலவுகளை ஏற்றுக் கொண்டார்.
ஜெர்மனியைச் சேர்ந்த டயான் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். டயான் க்ரூகர் செய்ததை நினைக்கையில் அஜீத் குமார் தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்ப்பவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுப்பது தான் நினைவுக்கு வருகிறது.
நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவி செய்வது பாராட்டுக்குரியது.
Post a Comment