'ரு' என்பது தமிழில் ஒரு உயிர்மெய் எழுத்து என்பது தெரியும்... ஆனால் சுத்தத் தமிழில், அது ஒரு எண்.
5 என்பதை தமிழில் ரு என்றுதான் குறிப்பிடுவார்கள். இன்றும் தமிழ் எண்களைப் பயன்படுத்த விரும்புவோர் இப்போதும் தங்கள் வாகனங்களில் இந்த தமிழ் எண் உருக்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
இன்னொன்னு சென்டிமென்ட், நம்பிக்கைப்படியும் ஐந்து என்ற எண்ணுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு.
இப்போது இந்த 'ரு' என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்கள், ஒரு புதிய படத்துக்கு.
சமூகத்தில் வாழ கூடாத,வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர்.
சர்வதேச அரங்கில் நமது நாடு தலை குனிய வைக்கும் ஒரு மிக பெரிய சமூக அவலத்தை இந்தப் படத்தில் காட்டப் போவதாகக் கூறுகிறார் 'ரு ' இயக்குநர் சதாசிவம்.
தொலை காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி இன்று திரை உலகில் கால் ஊன்றி நிற்கும் இர்பான் 'ரு ' படத்தில் நாயகனாக நடிக்கிறார். ரக்ஷிதா நாயகியாக நடிக்கிறார்.
இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ள இந்தப் படம் ஜூலையில் வெளியாகிறது.
Post a Comment