ஹைதராபாத்: எனக்கு மகன் இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் பொய், வதந்திதான் என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.
படங்கள் இருக்கிறதோ இல்லையோ.. எப்போதும் வதந்திகளில் இருப்பவர் நடிகர் சித்தார்த்.
திருமணமாகி, விவாகரத்தும் பெற்றுவிட்ட சித்தார்த்துடன் பல நடிகைகள் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டனர். நடிகை ஸ்ருதியும் அவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இப்போது நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் சித்தார்த்துக்கும் அவரது மனைவி, குழந்தைகளுக்கும் இன்றளவும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதில் படு அப்செட் ஆகிவிட்டாராம் சித்தார்த்.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சித்தார்த், "ஆமாம்... எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் மோக்லி. ஆனால் அவனுக்கு நான்கு கால்களும் ஒரு வாலும் இருக்கும்.
என்னுடைய இந்த செல்ல நாய்க்குட்டியை நான் தெரு ஓரத்தில் கண்டெடுத்தேன். நான் அவன் மீது அன்பு கொண்டு அவனை காப்பாற்றினேன்," என்று கடுப்புடன் கூறியுள்ளார்.
Post a Comment