ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடக்கிறது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஓடும் ரயிலில் வில்லன்களுடன் ரஜினி மோதும் காட்சி படமாக்கப்பட்டது.
ரஜினியின் ‘லிங்கா' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். சுதந்திர காலத்துக்கு முந்தைய ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷியும், மாடர்ன் இளைஞரான ரஜினிக்கு அனுஷ்கா ஜோடியாகவும் நடிக்கின்றனர்.
வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நயன்தாரா ஒரு பாடல் காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தேவ்கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஹாலிவுட்டிலிருந்து லாரன் இர்வின் என்ற நடிகையும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
லிங்காவின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் 40 நாட்கள் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான காட்சிகளை சுட்டுத் தள்ளிவிட்டார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் ரயிலில் வில்லன்களுடன் ரஜினி சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த ஷெட்யூலில் ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.
Post a Comment