ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் பொய்யானது... அதிர்ச்சியாக உள்ளது!- நெஸ் வாடியா

|

மும்பை: ப்ரீத்தி ஜிந்தா என்மீது கூறியுள்ளவை பொய்யான குற்றச்சாட்டுகள். எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது என நெஸ் வாடியா கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். நெஸ் வாடியா, பிரபல பாம்பே டையிங் நிறுவன அதிபர்.

ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் பொய்யானது... அதிர்ச்சியாக உள்ளது!- நெஸ் வாடியா

ப்ரீத்தி ஜிந்தாவுடன் 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் பிரிந்தனர். உறவு பிரிந்தாலும், பிஸினஸில் பிரியவில்லை. கிரிக்கெட் வியாபாரத்தை இணைந்தே செய்தனர்.

இந்த நிலையில் கடந்த மே 30-ம் தேதி தான் ப்ரீத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் குறித்து அவர் கூறுகையில், "பிரீத்தி ஜிந்தாவின் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. இந்த வழக்கைச் சந்திக்க தயாராகவே உள்ளேன். காரணம், இது ஆதாரமற்ற புகார் என்பது எனக்குத் தெரியும்,'' என்றார்.

 

Post a Comment