ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கு தனி ஒருவன் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது, என்றாலும் தலைப்பு என்ன என்பதை மட்டும் அறிவிக்காமல் இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்போது 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனி ஒருவன் என்ற தலைப்பை இப்போது அறிவித்துள்ளனர்.
ஜெயம் தொடங்கி, தில்லாலங்கிடி வரை 5 படங்களில் ஜெயம் ரவியை இயக்கியுள்ளார் ராஜா.
இவை ஐந்துமே கமர்ஷியலாக நன்றாக போன படங்கள்தான். இப்போது 6வதாக தனி ஒருவன் படத்தை இயக்குகிறார் ஜெயம் ராஜா. இந்தப் படத்தில் நயன்தாரா போலீஸாக நடிக்கிறாராம். ஒரு புதிய வில்லனை இதில் அறிமுககப்படுத்துகிறாராம் ராஜா!
Post a Comment